ஜந்துவாக கருதப்பட்ட கருப்பு பெண் ஆலெக் மெக்!

கறுப்பர்களின் நிறம் குறித்த தாழ்வு மனப்பான்மையும், உளவியல் ஆதிக்கத்திலிருந்து விடுபடாத வெள்ளை நிறத்தின் மோகமும், காலகாலமான புனைவுகளை விட்டு விலகுவது என்பது எளிதானதல்ல. சமீபத்தில் ஒரு தமிழ் திரைப்படத்தில் கறுத்த பெண்களாக அங்கவை, சங்கவை என்று தமிழ்பெயர்களை வைத்த பெண்களை திரைப்படத்தில் காட்டும் போது கறுப்பு நிறத்தை மிகைப்படுத்திக் காட்டுவதற்காக உடம்பில் கரியை பூசி வைத்திருந்தனர்.

கறுப்பு நிறமென்றால் துக்கத்திற்கு அடையாளமாக்கப்பட்டது. கறுப்பு நிறமென்றால் கள்ளத்தனத்துக்கு ஒப்பிட்டுப் பேசப்பட்டது. கறுப்பு நிறமுடைய மனிதர்கள் என்றால் இழித்துப் பேசப்பட்டது. பேசிக்கொண்டும் வருகின்றது. இன்னமும் ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர்களை பற்றி பேசும் போது “கறுப்பர்கள்” என்ற நிறக்குறியீட்டைத்தான் நாம் [நான் உட்பட] அனைவரும் உபயோகித்துக் கொண்டிருக்கின்றோம்.

கறுப்பு நிறத்தை குறித்த அபிப்பிராயங்களை முதன் முதலில் மேலைநாட்டினரிடமிருந்து தான் தோன்றியிருக்கின்றது. கறுப்பு நிறத்தைக் குறித்த மதிப்பிடுகள் உலகம் முழுவதும் ஒரே அபிப்பிராயத்தைக் கொண்ட மொழியாகவே இருக்கின்றன. ஆரியர்களாலும், ஐரோப்பியர்களாலும் திராவிடர்களை கறுப்பு இனத்தவர்கள் என்று தான் சுட்டிக்காட்டப்படுகின்றோம்.

 

´ஆலெக் மெக்´ தீவிரமாக முயற்சி செய்தாள். விமர்சனங்களை ஏற்றுக் கொண்டாள். பெயிட்டிங் செய்வதில் ஆர்வமுள்ளவளான அவள் நிறைய பெயிண்டிங் செய்வதிலும், விதவிதமாக கைப்பைகள் மாடல்களும் உருவாக்கினாள். அரசியல் கலவரத்தில் இறந்து போன தன் தந்தையின் பெயரை கைப்பைகளுக்கு வைத்தாள். சிறுக சிறுக அவளின் முன்னேற்றம் John Galliano, Donna Karan, Calvin Klein போன்ற புகழ்பெற்ற மாடல் நிறுவனங்களுக்கு மாடல் செய்யும் வாய்ப்புகள் குவிந்தன.

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service

PROS

+
Add Field

CONS

+
Add Field
Choose Image
Choose Video
X